வாழ்நாளில் எத்தனை முறை உண்மையான காதல் வரும் என்பது குறித்த அமெரிக்க ஆய்வின் அதிரடித் தகவல்

வாழ்நாளில் எத்தனை முறை உண்மையான காதல் வரும் என்பது குறித்த அமெரிக்க ஆய்வின் அதிரடித் தகவல்

அமெரிக்காவின் கின்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக இரண்டு முறை மட்டுமே ஆழமான காதலை அனுபவிக்கிறான் என்று தெரியவந்துள்ளது. 18 முதல் 99 வயது வரையிலான சுமார் 10,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலானோர் தங்களின் வாழ்வில் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே தீவிரமான காதலை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வின்படி, 28 சதவீதத்தினர் ஒரு முறையும், 30 சதவீதத்தினர் இரண்டு முறையும் காதலித்துள்ளனர். ஆனால் 14 சதவீதத்தினர் தங்களுக்கு அந்த உணர்வே ஏற்பட்டதில்லை எனக் கூறியுள்ளனர். நிபுணர் டாக்டர் அமண்டா கெசல்மேன் கருத்துப்படி, உண்மையான காதல் என்பது ஒரு அரிய அனுபவம், இதில் வயது அல்லது பாலின வேறுபாடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *