நடுரோட்டில் நின்ற 30,000 பேர்.. திடீரென பாட்டை நிறுத்திய சோனு நிகாம்! என்ன நடந்தது?

நடுரோட்டில் நின்ற 30,000 பேர்.. திடீரென பாட்டை நிறுத்திய சோனு நிகாம்! என்ன நடந்தது?

ஹுப்பள்ளியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகர் சோனு நிகாம், திடீரென பாடுவதை நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சுமார் 30,000 ரசிகர்கள் கூடியிருந்த அந்த பிரம்மாண்ட கூட்டத்தில், ‘ஸ்ரீ சாய்’ என்ற சிறுவன் தனது குடும்பத்தினரை பிரிந்து அழுதுகொண்டிருந்ததை சோனு கவனித்தார்.

உடனடியாக மைக்கை கையில் எடுத்த அவர், பதற்றமடையாமல் அந்தச் சிறுவனின் மாமாவை தேடி மேடையிலிருந்தே நகைச்சுவையாக ஒரு பாடலைப் பாடினார். பாடகரின் இந்த சமயோசித புத்தியால் அந்தச் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

வெறும் பொழுதுபோக்கு மட்டும் கலைஞனின் கடமையல்ல, சமூகப் பொறுப்பும் மிக முக்கியம் என்பதை மெய்ப்பித்த சோனு நிகாமின் இந்தச் செயல் தற்போது இணையதளங்களில் வைரலாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *