தொகுதி பங்கீட்டை அதிரடியாக முடிக்கும் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள்

தொகுதி பங்கீட்டை அதிரடியாக முடிக்கும் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நாளைக்குள் முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதில் விசிக கட்சிக்கு 8 தொகுதிகளும், மதிமுகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் திமுக நேரடியாக 160 இடங்களிலும், உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்களிலும் களம் காண உள்ளது.

புதிய கூட்டணிக் கட்சிகளின் வருகையால் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், நாளை திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இதற்கான பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *