பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடல்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடல்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நாடு தழுவிய அவசர சேமிப்பு கொள்கையை அறிவித்துள்ளார். இதன் விளைவாக அடுத்த 15 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதோடு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எரிபொருள் செலவைக் குறைக்க அரசு அலுவலகங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள். இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்காக வங்கிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள இந்த விநியோகத் தடையால் இஸ்லாமாபாத் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *