துபாயில் பிரம்மாண்ட கப்பல் திருமணம் செய்த அனுராக் திவேதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
December 17, 2025

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பேண்டஸி விளையாட்டு விளம்பரதாரர் அனுராக் திவேதியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சமீபத்தில் துபாயில் ஒரு சொகுசு கப்பலில் பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்திய இவர், தனது கிராமத்தைச் சேர்ந்த 20 பேரைச் சொந்த செலவில் அழைத்துச் சென்றதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.
ஆன்லைன் சூதாட்ட நெட்வொர்க் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. புதன்கிழமை காலை 10 வாகனங்களில் வந்த 16 அதிகாரிகள் கொண்ட குழு பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். சோதனையின் போது அனுராக் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.