நாட்டின் ஜிடிபியை விட மெஸ்சியின் ஒரு காலின் காப்பீடு அதிகம் வியக்க வைக்கும் பல கோடி மதிப்பிலான ரகசியம்
December 17, 2025

லியோனல் மெஸ்சியின் இந்திய வருகை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. டெல்லி பயணத்தின் போது மெஸ்சிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி மற்றும் கையெழுத்திடப்பட்ட பேட் வழங்கப்பட்டது. இதில் அனைவரையும் வியக்க வைத்த விஷயம் மெஸ்சியின் இடது காலின் காப்பீட்டுத் தொகை தான். இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் டாலர் அல்லது 74 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இவ்வளவு பெரிய காப்பீட்டுத் தொகை இருப்பதால் தான் மெஸ்சி காட்சிப் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்கிறார். பாலாவு மற்றும் துவாலு போன்ற சிறிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட மெஸ்சியின் ஒரு காலின் மதிப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.