திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடப்போகும் அந்த அதிரடி அறிவிப்பு என்ன

திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடப்போகும் அந்த அதிரடி அறிவிப்பு என்ன

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த எழுச்சி மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 650 ஏக்கர் பரப்பளவில் 9 நுழைவாயில்களுடன் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கரில் தொண்டர்கள் அமருவதற்கான வசதிகளும், 50,000 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளன.

மாலை 3 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வரும் முதலமைச்சர், கட்சி கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் முக்கிய வாக்குறுதிகள் வெளியிடப்பட்ட நிலையில், இன்றைய கூட்டத்திலும் பல்வேறு புதிய மற்றும் அதிரடி அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்காக குடிநீர், முதலுதவி மற்றும் உணவு வசதிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *