ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அதிரடி நியமனம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அதிரடி நியமனம்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் நிபுணர்கள் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளன. 56 வயதான மொஜ்தபா, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் மற்றும் நீண்டகாலமாக தனது தந்தையின் வாரிசாகவே பார்க்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது நீண்ட காலம் நீடிக்காது என எச்சரித்துள்ளார். இஸ்ரேலும் புதிய தலைமைக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. இருப்பினும், அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவித்துள்ளது. போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், மொஜ்தபாவின் இந்த புதிய பதவி ஏற்பு ஈரானின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *