திருச்சி என்டிஏ கூட்ட பேனரில் எடப்பாடியார் படம் புறக்கணிப்பு தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் முகப்பு பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்வில், மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழக என்டிஏ-வின் முக்கிய முகமான ஈபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட இதர தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் எடப்பாடியாருக்கு மறுக்கப்பட்டதால் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் சூழலில், அதிமுக தலைமை புறக்கணிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதன்காரணமாக மைதான வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.