திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை இடங்கள் தெரியுமா
March 18, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. நான்கு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.
அறிவாலயத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில், இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், மதிமுகவிற்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐயுஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொமதேக ஆகியவற்றுக்குத் தலா 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.