திண்டுக்கல்லில் ஓடும் ஆட்டோவில் வந்து சிலிண்டர் திருட்டு மர்ம கும்பலின் கைவரிசை
March 11, 2026

திண்டுக்கல் மெங்கிலிஸ் சாலை மற்றும் பிள்ளையார்நத்தம் பகுதிகளில் சிலிண்டர் விநியோக ஊழியர்கள் வீடுகளுக்குள் சென்ற நேரத்தில், சாலையோரம் நின்றிருந்த சைக்கிளில் இருந்து சிலிண்டர்கள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளன. ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இந்த துணிச்சலான திருட்டில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஏஜென்சிகள் அறிவுறுத்தியுள்ளன. பொதுமக்களிடையே இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.