தனித்து ஆட்சி அமைக்க எடப்பாடியார் உறுதி, அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி
March 13, 2026

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட்டு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஆனால், பாஜக கூடுதல் இடங்களை கேட்டு கூட்டணி ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்க பாஜக ஆர்வம் காட்டினாலும், எடப்பாடியார் அதில் விருப்பம் காட்டவில்லை. புதிய கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என அவர் கருதுகிறார். இதனால், கூட்டணி ஆட்சி என்ற பாஜகவின் திட்டத்தை முறியடித்து, அதிமுகவின் தனிப்பெரும்பான்மையை உறுதி செய்ய அவர் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார்.