சசிகலாவின் புதிய கட்சி சின்னம் குறித்த சுவாரஸ்யமான பின்னணி
March 13, 2026

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியின் பெயரையும், அதன் சின்னமாக ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் சசிகலா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இதே தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனுக்காகவே இந்தப் புதிய பயணத்தைத் தொடங்குவதாகக் கூறிய சசிகலா, அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் பொறித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒரு காலத்தில் தமாகா பயன்படுத்திய இந்தச் சின்னம், தற்போது சசிகலாவின் அரசியல் நகர்வுகளுக்கு எந்தளவிற்கு வலு சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பரவலாக எழுந்துள்ளது.