டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை தொழிலாளர்களுக்கு தலா பத்து ஆயிரம் ரூபாய் நிதியுதவி
December 17, 2025

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை நேரடியாகத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும், வாகனப் புகையைக் குறைக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர சேவைகள் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் காற்றுத் தரத்தை மேம்படுத்தவும் இந்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.