டெல்லியில் ஒரு நாள் தங்க இத்தனை லட்சமா வியக்க வைக்கும் ஹோட்டல் வாடகை

டெல்லியில் ஒரு நாள் தங்க இத்தனை லட்சமா வியக்க வைக்கும் ஹோட்டல் வாடகை

பிப்ரவரி 16 முதல் 20 வரை டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ காரணமாக நட்சத்திர ஹோட்டல்களின் வாடகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 100 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் சிஇஓ-க்கள் வருகையால், இம்பீரியல் போன்ற ஹோட்டல்களில் ஒரு இரவு தங்க வரி உட்பட ₹2.32 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

முக்கிய ஹோட்டல்களில் அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு விருந்தினர்களின் வருகையால் பிரீமியம் சூட் அறைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சாதாரண பயணிகளுக்கு தங்குமிடம் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *