சம்பளம் உயரப்போகுது! முக்கியமான நகரங்களில் வசிப்பவர்களுக்கு மத்திய அரசின் அதிரடி சலுகை

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற வளர்ந்து வரும் பெருநகரங்களில் பணிபுரிவோருக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விதிகளில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. தற்போது டெல்லி, மும்பை போன்ற நான்கு நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 50 சதவீத வரி விலக்கு சலுகை, இனி இந்த புதிய நகரங்களுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் நிகர சம்பளம் கணிசமாக உயரும்.
பழைய வரி முறையைப் பின்பற்றுவோருக்கு இந்த நடவடிக்கை பெரும் நிதியாதாரமாக அமையும். நகரங்களில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் வரிச் சுமையைக் குறைப்பதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும். இந்த புதிய திட்டத்தின் கீழ், எட்டு முக்கிய நகரங்கள் 50 சதவீத HRA வரி விலக்கு வரம்பிற்குள் கொண்டு வரப்படும், இது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும்.