டி20 உலகக்கோப்பை 2026: வான்கடேவில் பாட்ஷா – நோரா ஃபதேஹி ஆட்டம்! கோலாகலமாக தொடங்கும் கிரிக்கெட் திருவிழா!

டி20 உலகக்கோப்பை 2026: வான்கடேவில் பாட்ஷா – நோரா ஃபதேஹி ஆட்டம்! கோலாகலமாக தொடங்கும் கிரிக்கெட் திருவிழா!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் சனிக்கிழமை முதல் துவங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பாட்ஷா, நோரா ஃபதேஹி, ரிஷப் சர்மா மற்றும் சிவமணி ஆகியோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். மாலை 6 மணிக்குத் தொடங்கும் இவ்விழாவில், ஜெட்பேக் தொழில்நுட்பம் மூலம் உலகக்கோப்பை கோப்பை மைதானத்திற்கு கொண்டு வரப்படும். ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் ரோகித் சர்மா முன்னிலையில் இந்த திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

தொடக்க விழாவைத் தொடர்ந்து அன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பையில் இந்தியா – அமெரிக்கா மோதும் நிலையில், கொழும்புவில் பாகிஸ்தான் – நெதர்லாந்து மற்றும் கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் மட்டுமே இந்த கண்கவர் தொடக்க விழாவை நேரில் காண அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *