ஜல் ஜீவன் நிதி நிலுவை பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
March 13, 2026

தமிழக கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வர வேண்டிய 3,112 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசிடமிருந்து நிதி வராத நிலையிலும், பணிகளைத் தொய்வின்றி நடத்த மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குத் தேவையான அனுமதி மற்றும் நிதியுதவியை வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி, மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நிதி நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.