சென்னையில் திருச்சி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகார் பொய்

சென்னையில் திருச்சி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகார் பொய்

சென்னையில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி மாதம் புராஜெக்ட் பணிக்காக சென்னை வந்த அந்த மாணவி, மார்ச் 9 மற்றும் 10 தேதிகளில் தான் கடத்தப்பட்டதாக அளித்த புகாரில் உண்மையில்லை என்பது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் உறுதியானது.

தனிப்பட்ட மன உளைச்சல் மற்றும் படிப்பின் காரணமாக ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே தான் இவ்வாறு பொய் புகார் அளித்ததாக அந்த மாணவி போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், பாதுகாப்பு தொடர்பான அச்சங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *