சென்னையில் இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை திடீர் தடை விதித்ததால் பரபரப்பு
March 11, 2026

சென்னையில் வரும் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ‘தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு’ காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடையை எதிர்த்து அக்கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை ஜனநாயக விரோதமானது என்று முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், ஆன்மீக பேரணிக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறையின் அச்சுறுத்தல்களையும் மீறி சட்டப்பூர்வமாக இந்த மாநாடு திட்டமிட்டபடி நடத்தப்படும் என அர்ஜுன் சம்பத் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.