சென்னையில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த புதிய பிரீமியம் ஏசி மின்சார பேருந்து சேவை

சென்னையில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த புதிய பிரீமியம் ஏசி மின்சார பேருந்து சேவை

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நவீன வசதிகள் கொண்ட தாழ்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நகரின் முக்கிய வழித்தடங்களில் 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 40 கிலோ மீட்டர் வரையிலான தூரத்தை இணைக்கும் வகையில் இந்த சொகுசு போக்குவரத்து திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *