சிபிஐ விசாரணைக்கு விஜய் நாளை ஆஜராகவில்லை

சிபிஐ விசாரணைக்கு விஜய் நாளை ஆஜராகவில்லை

கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் நாளை டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் நாளை திட்டமிட்டபடி முதற்கட்ட வேட்பாளர் நேர்காணலில் விஜய் பங்கேற்கிறார். விசாரணைக்கு ஆஜராக அவர் சிபிஐ தரப்பிடம் பத்து நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே விஜயை என்டிஏ கூட்டணியில் இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு சிபிஐ மற்றும் திரைப்படத் தணிக்கை மூலம் அழுத்தம் கொடுப்பதாகப் பேசப்படும் சூழலில் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத் தணிக்கை தள்ளிப்போயுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *