சிட்னி பாண்டிங் கடற்கரையில் யூதர்கள் மீது துப்பாக்கிச்சூடு: தீவிரவாத தாக்குதலாக பார்க்க மறுக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டிங் கடற்கரை பகுதியில் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த யூதர்கள் மீது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். இருப்பினும், ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) இந்த படுகொலையை உடனடியாக தீவிரவாத தாக்குதலாக அறிவிக்கவில்லை. இந்த கோரமான சம்பவத்திற்குப் பிறகும், தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை தற்போதைக்கு “சாத்தியமான” (Probable) அளவிலேயே நீடிப்பதாகவும், அதை மாற்றும் திட்டம் இல்லை என்றும் ASIO-வின் இயக்குநர் ஜெனரல் மைக் பர்கஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஒரே ஒரு நிகழ்வு மட்டும் தேசிய அச்சுறுத்தல் நிலையை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று பர்கஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 8 நாள் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கூடியிருந்த யூதர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) கேம்பல் பரேடில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மறைவிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களின் அந்த வாகனத்தில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதால், சம்பவ இடம் ‘குற்றச் சம்பவம் நடந்த இடமாக’ அறிவிக்கப்பட்டது.