சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவச பரிசோதனை
March 9, 2026

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மகப்பேறு காலம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்பதால், ஹார்மோன் குறைபாடு உள்ள பெண்கள் உரிய காலத்தில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவர் சவுந்தரி தெரிவித்துள்ளார்.
இந்த இலவச சேவையைப் பெற விரும்பும் பெண்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணையதளம் அல்லது தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் பெண்களுக்கு அருகிலுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கிளைகளில் பரிசோதனை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் மருத்துவக் குழுவினர் செய்துள்ளனர்.