சர்க்கரை நோயாளிகள் இனி தாராளமாக சோறு சாப்பிடலாம் இந்த ஒரு சின்ன மாற்றம் போதும்

சர்க்கரை நோயாளிகள் இனி தாராளமாக சோறு சாப்பிடலாம் இந்த ஒரு சின்ன மாற்றம் போதும்

உலகளவில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இதில் முக்கிய இடத்தில் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் என்ற பயத்தில் பலர் சோறு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் அரிசியில் உள்ள ஸ்டார்ச் சத்து நேரடியாக ரத்தத்தில் கலப்பதே இதற்கு காரணம். சமைத்த சோற்றை சரியான முறையில் கையாள்வதன் மூலம் இந்த பாதிப்பை எளிதாகக் குறைக்க முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமைத்த சோற்றை உடனடியாகச் சாப்பிடாமல் சுமார் எட்டு முதல் பத்து மணி நேரம் குளிர வைப்பதன் மூலம் அதில் உள்ள ஸ்டார்ச் ‘ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச்’ ஆக மாறுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுத்து நார்ச்சத்து போல செயல்படுகிறது. இந்த முறை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் சோறு சாப்பிடுவது இனி ஒரு பிரச்சனையாக இருக்காது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *