சரியான திசையில் மணி பிளாண்ட் வைத்து உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்
February 9, 2026

வீட்டின் செல்வச் செழிப்பை அதிகரிக்க வளர்க்கப்படும் மணி பிளாண்ட் செடியை தவறான திசையில் வைப்பது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. குறிப்பாக தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இந்தச் செடியை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கி மன அமைதியைக் குலைக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, செல்வம் மற்றும் தடைகளை நீக்கும் கணபதிக்குரிய தென்கிழக்கு திசையே மணி பிளாண்ட் வைக்க உகந்தது. செடியின் கொடிகள் தரையில் படராமல் மேல்நோக்கி வளர்வதை உறுதி செய்வதுடன், காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றுவது அவசியம். இச்செடியை வீட்டின் உட்புறம் வளர்ப்பதே நிலையான வளர்ச்சியையும் பணப்புழக்கத்தையும் தேடித்தரும்.