சல்லி காசுக்கு ஆசைப்பட்டு உள்ளூர் சார்ஜர் வாங்குகிறீர்களா? உங்கள் விலை உயர்ந்த போனுக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்!
February 9, 2026

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பணத்தை சேமிக்க மக்கள் மலிவான உள்ளூர் சார்ஜர்களை நாடுகின்றனர். ஆனால், இத்தகைய தரமற்ற சார்ஜர்கள் போனின் வெப்பநிலையை உயர்த்தி வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் போன் மட்டுமன்றி பயனர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உள்ளூர் சார்ஜர்களில் உள்ள தரம் குறைந்த பாகங்கள் சீரற்ற மின்சாரத்தை வழங்குவதால் லித்தியம்-அயன் பேட்டரிகள் விரைவில் செயலிழக்கின்றன. அசல் சார்ஜர்களில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் இவற்றில் இல்லாததால், ஷார்ட் சர்க்யூட் போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் முற்றிலும் குறைந்துவிடுகிறது.