சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்: HRA வரி விலக்கு 50% உயர்வு!
February 10, 2026

பழைய வரி முறையின்கீழ் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரி விலக்கு வரம்பை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் சம்பளதாரர்கள் இனி 50 சதவீதம் வரை HRA வரி விலக்கைப் பெற முடியும்.
தற்போது இந்த 50 சதவீத வரி சலுகை மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த புதிய நடவடிக்கையால், மேற்கண்ட நகரங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க ஊழியர்கள் அதிக வரி சேமிப்பை பெற வழிவகை ஏற்படும்.