கே-பாப் பாடல் கேட்டால் மரணதண்டனை! கிம் ஜான் உன் ஆட்சியில் கொடூரம்
February 10, 2026

வடகொரியாவில் அதிபர் கிம் ஜான் உன் தலைமையிலான நிர்வாகத்தின் இரக்கமற்ற முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்கொரியாவின் புகழ்பெற்ற ‘பிடிஎஸ்’ (BTS) இசைக்குழுவின் பாடல்களைக் கேட்டதற்காக, 16 முதல் 17 வயதுடைய மூன்று மாணவிகளுக்குப் பகிரங்கமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக மனித உரிமைக் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு கலாச்சாரம் மற்றும் ‘கே-பாப்’ (K-pop) இசைக்கு வடகொரியாவில் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி பாடல்களைக் கேட்டதாகக் கூறி, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் இந்த மாணவிகளுக்குப் பொதுவெளியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பியாங்யாங் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.