சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அதிரடி
February 9, 2026

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒன்பதாவது நாளில் லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கக் கோரி கோஷங்களை எழுப்பியதால் சபை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. விதிகளை பின்பற்றி அனைவரும் பேசலாம் என்றும், சபை முழக்கமிடுவதற்காக அல்ல என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பளித்தால் மட்டுமே சபை சுமூகமாக நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.