சதுரங்க ஆட்டத்தில் உலக சாதனை படைத்த அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் மோடி புகழாரம்

சதுரங்க ஆட்டத்தில் உலக சாதனை படைத்த அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் மோடி புகழாரம்

தோஹாவில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர் அர்ஜுன் எரிகைசி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். தனது 14 வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற அர்ஜுன், விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு 2800 ஃபிடே ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அர்ஜுனின் இந்த அபார வெற்றியைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவரது திறமை பாராட்டுக்குரியது எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விளையாட்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமர், அர்ஜுனின் எதிர்கால வெற்றிகளுக்காகத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *