கோவில் கழிவறையில் இரு சிறுமிகள் சடலமாக மீட்பு அவர்களின் செல்போன் தேடல் வரலாற்றைக் கண்டு உறைந்துபோன போலீசார்

கோவில் கழிவறையில் இரு சிறுமிகள் சடலமாக மீட்பு அவர்களின் செல்போன் தேடல் வரலாற்றைக் கண்டு உறைந்துபோன போலீசார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரபல கோவில் கழிவறையில் இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் கழிவறையை விட்டு அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மயங்கிக் கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய சோதனையில் அந்த சிறுமிகளின் செல்போனில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. தற்கொலை செய்வது எப்படி மற்றும் வலியின்றி உயிரை விடுவது குறித்த வழிகளை அவர்கள் கூகுளில் தேடியது உறுதியானது. இந்த விபரீத முடிவிற்குப் பின்னால் குடும்பப் பிரச்சனையா அல்லது மிரட்டல் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *