கூட்டணி தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவால் பாஜக மற்றும் அமமுக பின்னடைவு

கூட்டணி தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவால் பாஜக மற்றும் அமமுக பின்னடைவு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 60 தொகுதிகள் வரை கேட்ட பாஜகவிற்கு, 29 இடங்களை மட்டுமே ஒதுக்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக சம்மதித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களை விட ஒரு தொகுதி கூடுதலாக பெற்று பாஜக சமரசத்திற்கு வந்துள்ளது.

அதேபோல் 13 இடங்களை எதிர்பார்த்த டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 9 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவிற்கு 18 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், அதிமுக சுமார் 170 தொகுதிகளில் களம் காண முடிவு செய்துள்ளது. மார்ச் 14 ஆம் தேதி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *