பாப் பாடகி ரிஹானாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் கைது

பாப் பாடகி ரிஹானாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் கைது

பிரபல பாடகி ரிஹானாவின் பெவர்லி ஹில்ஸ் இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவானா லிசெட் ஆர்டிஸ் என்ற பெண் ஏஆர்-15 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலில் வீட்டின் சுவர்கள் சேதமடைந்தன, ஆனால் அதிர்ஷ்டவசமாக ரிஹானாவும் அவரது குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர் என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் வெள்ளை நிற டெஸ்லா காரில் தப்ப முயன்ற அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கில் அவருக்கு சுமார் 850 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை தொடர்ந்து ரிஹானா தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *