கில் நீக்கம்! 2026 உலகக்கோப்பையில் அபிஷேக் ஜோடி யார்? ரவி சாஸ்திரி அதிரடி கருத்து

கில் நீக்கம்! 2026 உலகக்கோப்பையில் அபிஷேக் ஜோடி யார்? ரவி சாஸ்திரி அதிரடி கருத்து

2026 டி20 உலகக்கோப்பை அணியில் ஷுப்மன் கில் இடம் பெறாததால், அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கப்போவது சஞ்சு சாம்சனா அல்லது இஷான் கிஷனா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அபிஷேக்-சஞ்சு ஜோடி அதிரடியாக 63 ரன்கள் குவித்து நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய ரவி சாஸ்திரி, அவரை டாப் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்தாலும், தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் சஞ்சு சாம்சனுக்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *