கிருஷ்ணகிரியில் முதியவர் கொலை மற்றும் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் பின்னணியில் நிர்வாண மர்ம நபர்
March 10, 2026

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நள்ளிரவில் தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்த நிர்வாண மர்ம நபர் ஒருவர், தூங்கிக்கொண்டிருந்த 75 வயது விவசாயியை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கணவரின் அலறல் கேட்டு ஓடி வந்த 60 வயது மூதாட்டியையும் அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரள்வதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி அளித்த அடையாளங்களை வைத்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.