ஆண்களுக்கு பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் என வருவது புற்றுநோயின் அறிகுறியா

ஆண்களுக்கு பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் என வருவது புற்றுநோயின் அறிகுறியா

ஆண்களுக்கு பிரெக்னன்சி கிட்டில் பாசிட்டிவ் என்று வருவது மிகவும் அரிதானது மற்றும் இது ஒரு எச்சரிக்கை சமிக்கையாகும். பொதுவாக பெண்களுக்கு கருத்தரிப்பின் போது சுரக்கும் ஹெச்சிஜி (hCG) ஹார்மோன், ஆண்களுக்கு விந்துப்பை புற்றுநோய் (Testicular cancer) பாதிப்பு இருந்தால் மட்டுமே சுரக்கும். இதனால் சிறுநீரில் இந்த ஹார்மோன் கலந்து கிட்டில் பாசிட்டிவ் முடிவைக் காட்டுகிறது.

இதை வைத்து மட்டுமே புற்றுநோயை உறுதி செய்ய முடியாது என மருத்துவர் ஸ்ரீதேவி எச்சரிக்கிறார். விரைப்பையில் வீக்கம், வலி அல்லது அடிவயிற்றில் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இந்த வகை புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *