காலிதா ஜியாவின் மறைவுக்குப் பின் பிஎன்பி அதிரடி முக்கிய தலைவர்கள் 9 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

காலிதா ஜியாவின் மறைவுக்குப் பின் பிஎன்பி அதிரடி முக்கிய தலைவர்கள் 9 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா காலமான நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 9 பேரை அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சியின் மூத்த இணை பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் தன்னிச்சையாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதில் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைச் செயலாளர் ருமின் ஃபர்ஹானா உள்ளிட்ட முக்கிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உள்ளானவர்களில் முகமது கியாஸ் உதீன், சைஃபுல் ஆலம் மற்றும் தருண் டே போன்ற மூத்த தலைவர்களும் அடங்குவர். காலிதா ஜியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் அதே வேளையில், கட்சிக்குள் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் விதிகளை மீறி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *