புத்தாண்டு முதல் நாளில் குரு பிரதோஷ மகா சங்கமம் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக சில வழிகள்

புத்தாண்டு முதல் நாளில் குரு பிரதோஷ மகா சங்கமம் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக சில வழிகள்

புத்தாண்டின் தொடக்கமான ஜனவரி 1, 2026 அன்று ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ‘குரு பிரதோஷ’ விரதம் அமைகிறது. வியாழக்கிழமையுடன் இணைந்து வரும் இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மகிழ்ச்சி, அறிவு மற்றும் செல்வத்தைப் பெறுவதற்கு இந்த நாள் மிகச்சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்த புனித நாளில் அசைவ உணவுகள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோபம் கொள்ளாமல் அமைதியாக இறைவனை தியானிப்பதும், கருப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து மஞ்சள் அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணிவதும் சிறந்தது. மாலை வேளையில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு மஞ்சள் நிறப் பொருட்களை தானமாக வழங்குவது பொருளாதாரத் தடைகளை நீக்கி வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *