கரப்பான் பூச்சியை கொல்ல முயன்று நேர்ந்த விபரீதம் தீ விபத்தில் இளம்பெண் பலி

தென் கொரியாவின் ஓசன் நகரில் கரப்பான் பூச்சியை தீயிட்டு கொல்வதற்கு மேற்கொண்ட முயற்சி பெரும் விபத்தில் முடிந்தது. ஒரு பெண் லைட்டர் மற்றும் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி உருவாக்கிய நெருப்பு முழு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவியது. இதில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்த 30 வயது சீனப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தீப்பிடித்த போது தனது இரண்டு மாதக் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசி காப்பாற்றிய தம்பதியினரில், கணவர் உயிர் தப்பினார் ஆனால் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்த மற்ற எட்டு பேர் புகையினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக தீ விபத்தை ஏற்படுத்திய அந்த பெண் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஆபத்தான முறைகளைப் பின்பற்றி பூச்சிகளைக் கொல்ல முயல்வது இத்தகைய கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.