கணவன் ஆண்மையற்றவர் என்பதால் 90 லட்சம் இழப்பீடு கேட்ட மனைவிக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கணவன் ஆண்மையற்றவர் என்பதால் 90 லட்சம் இழப்பீடு கேட்ட மனைவிக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

செய்தி பிரிவு : தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. தனது கணவர் ஆண்மையற்றவர் என்று குற்றம் சாட்டிய பெண் ஒருவர், அதற்காக 90 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கணவரின் உடல்நிலை குறைபாட்டால் தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்தப் பெண் இந்த மிகப்பெரிய தொகையை இழப்பீடாகக் கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கணவர் ஆண்மையற்றவர் என்பதை நிரூபிக்க மருத்துவ ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பியது. ஆனால் அந்தப் பெண்ணால் நீதிமன்றத்தில் எந்தவிதமான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்க முடியவில்லை. போதிய ஆதாரங்கள் இல்லாமல் சுமத்தப்படும் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று கூறி, 90 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கோரிய மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *