கடல் நீர் ஏன் உப்பானது பார்வதி தேவியின் சாபமும் சிவபெருமானுக்கு இழைக்கப்பட்ட அவமானமும்

சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவபெருமானை அடைய கடற்கரையில் கடும் தவம் இருந்தார். தேவியின் அழகைக் கண்டு மயங்கிய சமுத்திர ராஜன் அவரைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் தேவி அதனை மறுத்து சிவபெருமான் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சமுத்திர ராஜன், சிவபெருமானை அவதூறாகப் பேசியதோடு, தனது இனிமையான நீரைக் குறித்து மிகுந்த அகங்காரத்துடன் தற்பெருமை பேசத் தொடங்கினார்.
தனது கணவரை சமுத்திர ராஜன் அவமதித்ததைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, அவருக்குக் கடும் சாபமிட்டார். உனது இனிமையான நீரைக் கண்டுதானே இவ்வளவு ஆணவம் கொள்கிறாய், அது இன்று முதல் குடிக்க உதவாத உப்பாக மாறட்டும் என்று சபித்தார். தேவியின் அந்தச் சாபத்தாலேயே அன்று முதல் கடல் நீர் உப்பாக மாறியதாகப் புராணங்கள் கூறுகின்றன. சமுத்திர ராஜனின் கர்வம் இவ்வாறுதான் அடக்கப்பட்டது.