ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட ரிச்சர்ட் கிளீசன் அபாரம் தென்னாப்பிரிக்க டி20 லீக் சூப்பர் ஓவரில் ஜோபர்க் சாதனை வெற்றி

தென்னாப்பிரிக்க டி20 லீக் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய ஜோபர்க் அணி 205 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய டர்பன் அணியும் 205 ரன்கள் எடுக்க, போட்டி டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது.
சமீபத்திய ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். சூப்பர் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 6 ரன்கள் என்ற இலக்கை ஜோபர்க் அணி 3 பந்துகளிலேயே எட்டி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் போக்கை மாற்றிய கிளீசன், ஐபிஎல் ஏமாற்றத்திற்கு தனது திறமையால் பதிலடி கொடுத்துள்ளார்.