கடல் நீரிலிருந்து மலிவு விலை எரிபொருள் சீன விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பால் உலக நாடுகள் வியப்பு

கடல் நீரிலிருந்து மலிவு விலை எரிபொருள் சீன விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பால் உலக நாடுகள் வியப்பு

சீனா கடல் நீரை மலிவான பசுமை ஹைட்ரஜன் எரிபொருளாகவும் தூய்மையான குடிநீராகவும் மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள இந்த ஆலை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தேவையற்ற வெப்பத்தை பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார செலவின்றி மிகக்குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் குடிநீரை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு கன மீட்டர் குடிநீரை சுத்திகரிக்க வெறும் 24 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஆண்டுக்கு 1,92,000 கன மீட்டர் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது, இது 100 பேருந்துகளை பல ஆயிரம் கிலோமீட்டர் இயக்க போதுமானது. எரிசக்தி மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *