ஏசி மற்றும் பிரிட்ஜ் பயன்படுத்தியும் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க இதோ எளிய வழிகள்
March 11, 2026

கோடை வெயிலில் ஏசி மற்றும் பிரிட்ஜ் பயன்பாட்டால் உயரும் மின் கட்டணத்தை குறைக்க நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ஏசியின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரிக்குள் வைப்பதன் மூலம் ஒவ்வொரு டிகிரிக்கும் 6 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் ஏசி ஓடும்போது மின்விசிறியை குறைந்த வேகத்தில் பயன்படுத்துவது அறையை விரைவாக குளிர்விக்க உதவும்.
பிரிட்ஜை சுவரிலிருந்து ஆறு அங்குல தூரத்தில் வைப்பதும் சூடான உணவுகளை நேரடியாக உள்ளே வைக்காமல் தவிர்ப்பதும் மின் நுகர்வை குறைக்கும். தேவையற்ற மின் சாதனங்களின் பிளக்குகளை அகற்றுவது மற்றும் எல்இடி விளக்குகளை பயன்படுத்துவது கூடுதல் சேமிப்பை தரும். இந்த எளிய மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கோடை காலத்திலும் மின் கட்டணத்தை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.