“எத்தனை வாக்குகள் பெற்றீர்கள்? விளம்பரத்திற்காகவா நீதிமன்றம்?” பிரசாந்த் கிஷோரை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்!

“எத்தனை வாக்குகள் பெற்றீர்கள்? விளம்பரத்திற்காகவா நீதிமன்றம்?” பிரசாந்த் கிஷோரை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியது. “தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, விளம்பரத்திற்காக நீதிமன்றத்தை நாடுகிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தோல்வியடைந்த ஒரு அரசியல் கட்சி முழு தேர்தல் செயல்முறையையும் சவாலுக்கு உட்படுத்துவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அரசாங்க நலத்திட்டங்கள் மூலம் வாக்காளர்கள் கவரப்பட்டதாக ஜன் சுராஜ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இலவசத் திட்டங்கள் குறித்து ஆட்சேபனை இருந்தால் அதை ஒரு பொதுநலன் விரும்பும் குடிமகன் தான் எழுப்ப வேண்டுமே தவிர, தோற்ற கட்சி அல்ல என்று நீதிபதிகள் கூறினர். இறுதியில், மனுவைத் திரும்பப் பெற்ற ஜன் சுராஜ் கட்சிக்கு, பாட்னா உயர்நீதிமன்றத்தை அணுக நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *