சட்டசபையில் வெடித்த மோதல்! சிறுபான்மையினர் குறித்து அக்னிமித்ரா பேச்சு: கொதித்தெழுந்த பிர்ஹாத் ஹக்கீம்!

சட்டசபையில் வெடித்த மோதல்! சிறுபான்மையினர் குறித்து அக்னிமித்ரா பேச்சு: கொதித்தெழுந்த பிர்ஹாத் ஹக்கீம்!

மதரஸா கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பாஜக எம்.எல்.ஏ அக்னிமித்ரா பால் பேசிய கருத்து மேற்கு வங்க சட்டசபையில் பெரும் புயலை கிளப்பியது. இந்த நிதி குற்றவாளிகளை உருவாக்கவா என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அக்னிமித்ராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். சபாநாயகர் தலையிட்டு அந்த சர்ச்சை கருத்தை சபைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம், “நாங்கள் குற்றவாளிகள் அல்ல” என ஆவேசமாக கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் சிறுபான்மையினரின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய அவர், அப்துல் கலாம் மற்றும் காசி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரை இழிவுபடுத்துவதா என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *