ஈராக் கடல் பகுதியில் அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை பயணித்த அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் சபௌசா விஷ்ணு என்ற இந்தியர் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானிய தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கக் கப்பல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்தக் கப்பலில் பணியாற்றிய மற்ற 15 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஈராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *