விஜய்க்கு ஆபத்து காத்திருக்கிறது எச்சரிக்கும் ஆதவ் அர்ஜுனா மைத்துனர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா தனது குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போலவே, விஜய்யின் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்கத் தயங்கமாட்டார் என்று மார்ட்டின் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கூடவே இருந்து குழிப்பறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காணத் தவறினால் விஜய்யின் அரசியல் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே கரூர் விபத்து தொடர்பான சிபிஐ விசாரணை மற்றும் குடும்ப ரீதியான சிக்கல்களில் சிக்கியுள்ள விஜய்க்கு, கட்சியில் உள்ள முக்கிய நபரின் உறவினரே இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.