இலவச மின்சார திட்டத்தில் அதிரடி மாற்றம் இனி சோலார் பேனல் அமைத்தால் அரசு தரும் பெரும் மானியம்

பிரதமர் சூரிய வீ்டு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு மானியத் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் அமைப்போருக்கு அதிகபட்சமாக 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது. மின் கட்டணத்தைக் குறைத்து நிலக்கரி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மத்திய அரசு 2027 ஆம் ஆண்டிற்குள் சுமார் 1 கோடி வீடுகளில் சூரிய சக்தி பேனல்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்களுக்குக் குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.